தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க தேர்தல்: தொகுதிப் பங்கீட்டிற்கு காங்கிரஸில் குழு அமைப்பு

4th Jan 2021 05:19 PM

ADVERTISEMENT

நடைபெற உள்ள மேற்குவங்க பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

இதையடுத்து, மேற்குவங்க மாநிலத்தில் இடதுசாரி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக கடந்த மாதம் அறிவித்தது.

இந்நிலையில், இடதுசாரிகளுடன் தொகுதிகள் பங்கீடு குறித்து முடிவு செய்வதற்காக ஆதிர் ரஞ்சன் செளத்ரி, அப்துல் மன்னன், பிரதீப் பட்டாச்சார்யா மற்றும் நேபாள் மகாடோ ஆகியோர் அடங்கிய குழுவை காங்கிரஸ் தரப்பில் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT