தற்போதைய செய்திகள்

அரக்கோணம் - சேலம் இடையே ஜன.6 முதல் விரைவு ரயில் இயக்கம்

4th Jan 2021 06:21 PM

ADVERTISEMENT

அரக்கோணம் - சேலம் இடையே வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி முதல் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்,

அரக்கோணம் - சேலம் இடையே ஜனவரி 6ஆம் தேதி முதல் சிறப்பு விரைவு ரயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும்.

இந்த ரயில், அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 10.50 மணிக்கு சென்றடையும். மீண்டும் சேலத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு இரவு 9.10 மணிக்கு வந்தடையும். 

ADVERTISEMENT

மேலும், சனி மற்றும் ஞாயிறுக்கிழமை தவிர மற்ற 5 நாள்களும் இந்த ரயில் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : train
ADVERTISEMENT
ADVERTISEMENT