தற்போதைய செய்திகள்

தேர்தல் குறித்த புகார் அளிக்க ‘சி-விஜில் ஆப்’

DIN

புது தில்லி: சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை ‘சி-விஜில்’ செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

அதன்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத்தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா அறிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையடுத்து இன்று மாலை 4.30 மணிமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்தில் ‘இசி-விஜில்’ செயலி மூலம் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT