தற்போதைய செய்திகள்

ரயில்வே ஊழியர்கள் 13,117 பேருக்கு கரோனா தடுப்பூசி

10th Feb 2021 07:09 PM

ADVERTISEMENT

 

ரயில்வே துறையின் சுகாதராப் பணியாளர்கள் 13,117 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 2 வாரமாக நடந்து வரும் நிலையில், இன்று ரயில்வே துறை ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து மக்களவையில் தகவல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சர் கூறியதாவது,

ADVERTISEMENT

ரயில்வே துறையின் சுகாதராப் பணியாளர்கள் 13,117 பேருக்கு முதற்கட்டமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் அடுத்தக்கட்டத்தில் ரயில்வே துறையின் முன்களப் பணியாளர்கள் 3,70,316 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT