தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 1.97 லட்சம் பேருக்கு தடுப்பூசி

10th Feb 2021 09:57 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் இதுவரை 1.97 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக புதன்கிழமை மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

தமிழகத்தில் இன்று முன்களப் பணியாளர்கள் உள்பட 11,815 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசி 7,860 பேருக்கு, கோவேக்சின் தடுப்பூசி 2,039 பேருக்கு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, 25 நாள்களில் மொத்தம் 1,97,114 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT