தற்போதைய செய்திகள்

சங்ககிரியில் 118 பயனாளிகளுக்கு மானிய விலை இருசக்கர வாகனம்

9th Feb 2021 06:49 PM

ADVERTISEMENT

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 22 ஊôரட்சிகளில் பணிக்கு செல்லும் 118 பயனாளிகளுக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான உத்தரவுகள் வழங்கும் விழா சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி எம்.மகேஸ்வரிமருதாசலம் தலைமை வகித்து  சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 22 ஊராட்சிகளில் வேலைக்கு செல்லும் 118  பெண் பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனத்திட்டத்தின் கீழ் மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான உத்தரவினை வழங்கினார். 

ஊராட்சி ஒன்றியக்குழுதுணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், சங்ககிரி நகர கூட்டுறவு வங்கித்தலைவர் என்.சி.ஆர்.ரத்தினம்,  அதிமுக மேற்கு ஒன்றியச் செயலர் எஸ்.சுந்தரராஜன்,  அதிமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலர் மருதாஜலம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என்.எஸ்.ரவிச்சந்திரன்,  வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) எம்.அனுராதா  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT