தற்போதைய செய்திகள்

அவிநாசியில் ஓய்வூதியர் தினவிழா

9th Feb 2021 05:45 PM

ADVERTISEMENT

அவிநாசி:  அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பு சார்பில், ஓய்வூதியர் தினவிழா அவிநாசியில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.

விழாவிற்கு வட்டாரத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். முன்னாள் வட்டாரத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார்.  மாநிலத்தலைவர் இராஜண்ணன் இயக்க கொடியேற்றி வைத்தார்.  மாநில பொருளாளர் ராமசாமி, தலைமை நிலைய செயலாளர் பாலகிருஷ்ணன், பொதுசெயலாளர் பொன்னுசாமி, அமைப்புசெயலாளர் தங்கராசா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் 70 மற்றும் 80 வயது நிறைவெய்திய பென்சனர்களைக் கௌரவித்தனர். மேலும்,‘சீடு’ இல்ல மூத்த குடிமக்களுக்கு  புத்தாடைகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் துணைத்தலைவர் சுவாமிநாதன், வட்டார செயலாளர்மணியன், மாவட்டத்தலைவர் அகஸ்டின்ராஜ், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, மாவட்ட பொருளாளர் ஜோசப், மாவட்ட துணைத்தலைவர் ஜார்ஜ், வட்டார பொருளாளர் சின்னத்தம்பி, முகமதுசித்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT