தற்போதைய செய்திகள்

மாநிலங்களவை நாளை(பிப்.9) வரை ஒத்திவைப்பு

8th Feb 2021 03:05 PM

ADVERTISEMENT

புது தில்லி: மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை(பிப்.9) காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் தொடர்ச்சியாக மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை காலை முதல் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் வெள்ளிக்கிழமை(பிப்.5) உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கூடிய மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதன்பின் செவ்வாய்க்கிழமை(பிப்.9) காலை 9 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்துள்ளார்.  

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT