தற்போதைய செய்திகள்

கேரளத்தில் 192 மாணவர்களுக்கு கரோனா

8th Feb 2021 03:23 PM

ADVERTISEMENT

கேரளத்தில் 192 மாணவர்கள் மற்றும் 72 ஆசிரியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்தாண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டது. அதன்பின், நோய்தொற்று பரவல் அடிப்படையில் மாநிலத்திற்கு ஏற்ப பள்ளிகள் திறக்கப்பட்டது.

இதனிடையே கேரளத்தில் நோய்த்தொற்றின் பரவல் குறையாத நிலையில் கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து மலப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,

ADVERTISEMENT

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மரஞ்சேரி மேல்நிலைப் பள்ளியில் 149 மாணவர்கள் மற்றும் 39 ஆசிரியர்கள், வன்னேரி மேல்நிலைப் பள்ளியில் 43 மாணவர்கள் மற்றும் 33ஆசிரியர்கள் என மொத்தம் 192 மாணவர்கள் மற்றும் 72 ஆசிரியர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT