ஹரியாணாவின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக வியாழக்கிழமை சென்றனர்.
நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தை கூட்டி வருகின்றனர். இந்நிலையில் ஹரியாணா மாநிலத்தில் சட்டப்பேரவையை கூட்டாததை எதிர்த்து, எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஹூடா கூறியதாவது,
நாங்கள் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்தக்கோரி பல முறை கேட்டும் நடத்தவில்லை. வேளாண் சட்டத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும். இந்த அரசு நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றார்.