தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராஜிநாமா

4th Feb 2021 06:16 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் தலைவர் நானா படோல் வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

ஆளும் சிவசேனாவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் நானா படோல்(வயது 57). இவர் 2019ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இதனிடையே, மாநில காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக நானா படோல் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தனது ராஜிநாமா கடிதத்தை துணை சபாநாயகர் நர்ஹரி சிர்வாலிடம் வியாழக்கிழமை ஒப்படைத்துள்ளார்.

 

ADVERTISEMENT

 

Tags : Nana Patole
ADVERTISEMENT
ADVERTISEMENT