ஹரியாணாவில் 2 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை நாளை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகளின் போராட்டம் தொடர்பான தவறான தகவல்கள், புரளிகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஹரியாணா மாநிலத்தின் சோனிபட் மற்றும் ஜாஜர் ஆகிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை செல்லிடப்பேசி அழைப்பு வசதிகளைத் தவிர இணைய சேவை துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாவட்டங்களில் செல்லிடப்பேசி இணைய சேவையுடன் குறுந்தகவல் அனுப்பும் வசதியும் நிறுத்தப்பட்டுள்ளது.