திரிணமூலில் இருந்து விலகிய துரோகிகளை வைத்து மேற்குவங்கத்தில் வெற்றி பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களில் சுவேந்து அதிகாரி உள்பட சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இதுகுறித்து கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் பேசிய மம்தா கூறுகையில்,
திரிணமூலில் இருந்து விலகிய துரோகிகளை வைத்து மேற்குவங்கத்தில் வெற்றி பெற பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜகவுக்கு செல்வோர், அது வன்முறையாளர்கள் கட்சி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அங்கு செல்பவர்கள் அனைவரும் அவர்களது சொத்துக்கள் மற்றும் அவர்களை பாதுகாத்துக் கொள்ளவே செல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT