தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் சிறையில் 270 இந்திய மீனவர்கள்: மத்திய அரசு

4th Feb 2021 04:03 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் சிறையில் 270 இந்திய மீனவர்கள் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் மாநிலங்களவையில் அளித்த பதிலில்,

பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் கடந்த ஜனவரி 2021-இல் பரிமாறிக்கொண்ட தகவலில்படி, பாகிஸ்தானின் 77 மீனவர்கள் மற்றும் 263 பொதுமக்கள் கைதிகளாக இந்தியக் காவலில் உள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியாவின் 270 மீனவர்கள், 49 பொதுமக்கள் கைதிகளாக பாகிஸ்தான் காவலில் உள்ளனர்.

இதனிடயே, காணாமல் போன இந்தியாவின் 83 பாதுகாப்புப் படை வீரர்களின் கைதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

மேலும், கடந்த 2020ஆம் ஆண்டில் 11 படகுகளில் சென்ற 74 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

Tags : Prisoners
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT