தற்போதைய செய்திகள்

குஜராத்தில் 2 மாநிலங்களவை காலி இடங்கள்: மார்ச் 1-இல் தேர்தல்

4th Feb 2021 04:46 PM

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான கண்காணிப்பாளராக தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணா செயல்படுவார் என தெரிவித்துள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு காங்கிரஸின் அகமத் படேல் மற்றும் பாஜகவின் அபெய் பரத்வாஜ் உயிரிழந்ததால், அந்த இடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

குஜராத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 18ஆம் தேதி கடைசி நாள். வேட்பு மனுவை திரும்பப் பெற பிப்.22 கடைசி நாள் என தெரிவித்துள்ளனர்.

மேலும், வாக்குப்பதிவானது மார்ச் 1ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும். அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

 அகமத் படேலின் பதவிக்காலம் ஆக. 2023 வரையும், அபெயின் பதவிக்காலம் ஜூன் 2026 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Gujarat
ADVERTISEMENT
ADVERTISEMENT