அதிகரித்து வரும் கரோனா பரவலையடுத்து தில்லியில் உள்ள மசூதி ஒன்றை தற்காலிக கரோனா சிகிச்சை மையமாக மாற்றியமைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தில்லியில் நாள்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தில்லியில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தில்லியில் உள்ள கிரின் பார்க் மசூதியை கரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளனர்.
இதுகுறித்து மசூதியின் இணை செயலாளார் கூறியது,
மருத்துவர்களின் பரிந்துரையின்படி வருபவர்களுக்கு இங்கு படுக்கை வழங்கப்படும். நாங்கள் உணவு, மருந்துகள், பிபிஇ உடை, முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவை இலவசமாக வழங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.