தற்போதைய செய்திகள்

தில்லி துணைநிலை ஆளுநருக்கு கரோனா பாதிப்பு

30th Apr 2021 02:57 PM

ADVERTISEMENT

தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் கரோனாவால் பாதிக்கப்பட்டது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

ADVERTISEMENT

எனக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. லேசான அறிகுறி மட்டுமே உள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கரோனா நிலைமையை நான் வீட்டிலிருந்தே கண்காணித்துக் கொண்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT