தற்போதைய செய்திகள்

அசாமில் ஒரே நாளில் 2-வது நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2ஆகப் பதிவு

30th Apr 2021 07:25 PM

ADVERTISEMENT

 

அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று இரண்டாவது முறையாக ரிக்டர் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை மாலை 6:27 மணியளவில் அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக மாலை 4.49 மணிக்கு இதே பகுதியில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. 

இந்த வரத்தில் ஏற்பட்ட நான்காவது நிலநடுக்கம் இதுவாகும். கடந்த புதன்கிழமை 6.4 ரிக்டர் அளவிலும், வியாழக்கிழமை 3.6 ரிக்டர் அளவிலும் அசாமின் இருவேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT