தில்லியில் கரோனாவால் பலியானவர்களின் உடல் அதிகளவில் வருவதால் பூங்காவை சுடுகாடாக மாற்றியுள்ளனர்.
கரோனா இரண்டாம் அலை தில்லி முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 20,201 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், பலியானவர்களின் உடலை எரிக்க சுடுகாடுகளில் 24 மணிநேரமும் கூட்டம் அலை மோதுகின்றன.
ADVERTISEMENT
இதை கட்டுப்படுத்துவதற்காக, தென் - கிழக்கு தில்லியின் சாராய் காலே கான் பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் தகன மேடைகளை மாற்றியுள்ளனர்.