தற்போதைய செய்திகள்

கர்நாடகத்திலிருந்து வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

27th Apr 2021 05:58 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் இன்று இரவு முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தைவிட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

கரோனா இரண்டாம் அலை கர்நாடகத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகமாகி வருகிறது.

இதைத் தொடா்ந்து, கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இரவுநேர ஊரடங்கு, வார இறுதி நாள்களில் ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நோய்த் தொற்று குறையாததால் மாநிலம் முழுவதும் இன்று இரவு 9 மணிமுதல் மே 10ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஊரடங்கு இன்று இரவு அமலுக்கு வரும் நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தோடு சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT