தற்போதைய செய்திகள்

ரூ.43 லட்சம் கரோனா நிதி அறிவித்த பிரெட் லீ

27th Apr 2021 08:27 PM

ADVERTISEMENT

இந்தியாவுக்கு கரோனா நிதியாக ரூ. 43 லட்சம் தருவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் உபகரணங்களை வாங்குவதற்காக பல தரப்பில் இருந்து நிதி உதவிகள் வந்து கொண்டுள்ளன.

அந்த வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரெட் லீ ரூ. 43 லட்சத்தை ஆக்ஸிஜன் தயார் செய்யும் உபகரணங்கள் வாங்குவதற்காக கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 50 ஆயிரம் டாலரை பிரதமரின் நிதிக்கு ஆக்ஸிஜன் உபகரணங்களை வாங்குவதற்காக அளித்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT