தற்போதைய செய்திகள்

கரோனா சிகிச்சைக்கு 64,000 படுக்கைகள் தயார்: இந்திய ரயில்வே

27th Apr 2021 04:57 PM

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களின் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்த பிரச்னைகளை தவிர்க்க ரயில் பெட்டிகளை கரோனா சிகிச்சை வார்டுகளாக ரயில்வே துறை மாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

ADVERTISEMENT

ககரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4,000 ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதுவரை 169 பெட்டிகள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், மாநிலங்களின் தேவைக்காக நாக்பூர், போபால், இந்தூர் ரயில் நிலையங்களுக்கு பெட்டிகள் அனுப்பப்படவுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT