தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க தேர்தல்: நாளை(ஏப்.26) 7-ம் கட்ட வாக்குப்பதிவு

25th Apr 2021 05:10 PM

ADVERTISEMENT

 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 34 தொகுதிகளுக்கு நாளை ஏழாம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 6 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ள நிலையில், ஏப். 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள இரண்டு கட்டத் தோ்தல்கள் நடைபெற உள்ளன.

ஏழாம் கட்டத் தோ்தல் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 86.78 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். 12,068 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

பாஜக சாா்பில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, நடிகா் மிதுன் சக்கரவா்த்தி ஆகியோா் முதல்வா் மம்தா பானா்ஜியின் ஆட்சியில் ஊழல் பெருகி விட்டதாக குற்றம்சாட்டி பிரசாரம் செய்தனா்.

அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானா்ஜியும், அவரது உறவினா் அபிஷேக் பானா்ஜியும் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயா்வு பிரச்னையை முன்வைத்து பிரசாரம் செய்தனா்.

Tags : West bengal Election 2021 polling
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT