தற்போதைய செய்திகள்

மன்னார்குடியில் ரூ.1.90 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்

25th Apr 2021 02:49 PM

ADVERTISEMENT


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரூபாய் 1.90 லட்சம் கள்ளப் நோட்டுகளுடன் தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தவர் காவல்துறையால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மன்னார்குடி அடுத்த திருமக்கோட்டை மகாராஜபுரம் ராகேந்திரன் மகன் மாதவன் (30). இவர் மீது மன்னார்குடி ,திருமக் கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக மாதவன், மன்னார்குடி அடுத்த அசேசத்தில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இவரது அறைக்கு, சனிக்கிழமை இரவு மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் வந்து திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

ADVERTISEMENT

அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த சூட்கேசில் புதிய 2 ஆயிரம் பணக் கட்டும், கஞ்சாப் பொட்டலும் இருந்துள்ளது.

பின்னர், மாதவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மேல் விசாரணை செய்ததில் சூட்கேசிலிருந்து ரூபாய் 1.90 லட்சம் 2 ஆயிம் நோட்டு அனைத்தும் கள்ளப் பணமும் என்பதும் 50 கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்ததையும் மாதவன் ஒத்துக் கொண்டார்.

மேலும், அண்மையில் கோவை மாவட்டம் பல்லடத்தில் கள்ளப் பணத்தை புழகத்தில் விட்ட புகாரில் கைது செய்யப்பட்டிருப்பவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, மாதவனை கைது செய்த காவல்துறை ரூ.1.90 லட்சம்  கள்ளப் பணத்தையும், 50 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியதுடன் மாதவனின் காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags : மன்னார்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT