தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க 6-ம் கட்ட வாக்குப்பதிவு: மாலை 6 மணி நிலவரம்

22nd Apr 2021 06:37 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் 43 பேரவைத் தொகுதிகளுக்கான ஆறாம் கட்டத் தோ்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 79.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்களிக்கும் இந்தத் தோ்தலில் 306 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 14,480 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப் பதிவு குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாலை 6 மணி நிலவரப்படி 79.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க பேரவையில் கடந்த ஐந்து கட்டங்களாக 180 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெற்றுள்ளது. 

ADVERTISEMENT

மீதமுள்ள 114 தொகுதிகளில் 43  தொகுதிகளுக்கு இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

எஞ்சியுள்ள 71 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26, 29 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற உள்ளது.

Tags : West bengal Election 2021 polling
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT