தற்போதைய செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: ஏப்.28 முதல் முன்பதிவு

22nd Apr 2021 05:55 PM

ADVERTISEMENT

நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 28 முதல் முன்பதிவு செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் வகையில் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

எனினும் இதற்கான முன்பதிவு நாளை மறுநாள் முதல் செய்யப்படும் என தகவல் வெளியான நிலையில், ஏப்ரல் 28 முதல் முன்பதிவு செய்யப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், 2-ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 3-ம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.    

Tags : Corona vaccine Harsh Vardhan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT