தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் உச்சமடையும் தினசரி பாதிப்பு: 12,652 பேருக்கு கரோனா

22nd Apr 2021 07:03 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 12,652 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,37,711ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 3789 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 59 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 13,317ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் 7526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,34,966 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 89,428 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus TN Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT