தற்போதைய செய்திகள்

ஹரியாணாவில் ஆக்ஸிஜன் லாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு

ANI

ஆக்ஸிஜன் ஏற்றிவரும் லாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஆக்ஸிஜனுக்கு தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹரியாணாவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை தில்லிக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், தங்கள் மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே மற்றவர்களுக்கு கொடுப்போம் என  ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹரியாணாவின் ஃபரிதாபாத் நகரில் உள்ள மருத்துவமனைக்கு ஆக்ஸிஜனை லாரியில் கொண்டு செல்லும் வழியில் தில்லி அரசு கொள்ளையடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அனைத்து ஆக்ஸிஜன் ஏற்றிவரும் லாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT