தற்போதைய செய்திகள்

‘குஜராத்தில் ஊரடங்கிற்கு அவசியமில்லை’: முதல்வர்

ANI

குஜராத் மாநிலத்தில் தற்போதைக்கு ஊரடங்கிற்கு அவசியமில்லை என முதல்வர் விஜய் ரூபானி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதையொட்டி, பல மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர்.

குஜராத்தில் நாள்தோறும் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்படுவதால் புதிய கட்டுப்பாடுகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் விஜய் ரூபானி கூறியது,

தற்போது 20 நகரங்களில் இரவுநேர ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்கள் போன்றவைக்கு பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் மேலும் 10 ஆயிரம் படுக்கைகள் உருவாக்கப்படும். ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT