தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்தது இரவுநேர ஊரடங்கு

DIN

தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

மாநிலம் முழுவதும் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனாவல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் மூத்த அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு வெளியான அறிக்கையில்,

ஏப்ரல் 20 முதல் இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை அறிவித்தனர்.

இதையடுத்து இன்று இரவு முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை மருத்துவ அவசரம் தவிர அனைத்து செயல்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் இன்று கூறியது,

அவசர தேவைக்கு தவிர, தேவையில்லாமல் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT