தற்போதைய செய்திகள்

கோயில் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி

13th Apr 2021 03:43 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த வாரம் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை, கோயில் மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், திருமணத்திற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே, தனிமனித இடைவெளியை பின்பற்றி நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

Tags : tamilnadu marriage
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT