தற்போதைய செய்திகள்

ஹரியாணாவில் இரவுநேர ஊரடங்கு அமல்

ANI

ஹரியாணாவில் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஹரியாணா மாநிலத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் ஹரியாணா மாநிலம் முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

SCROLL FOR NEXT