தற்போதைய செய்திகள்

கர்நாடகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

12th Apr 2021 06:02 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,579 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 9,579 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,74,869-ஆக உயர்ந்துள்ளது.

மேலும்,  2,767 பேர் குணமடைந்ததால், இதுவரை  மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 9,85,924-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

புதிதாக 52 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,941-ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் 75,985 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT