தற்போதைய செய்திகள்

அண்ணா பல்கலை. நிர்வகிக்க வழிகாட்டுதல் குழு நியமனம்

12th Apr 2021 02:14 PM

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த சூரப்பா ஓய்வுபெற்றதை அடுத்து புதிய துணை வேந்தர் நியமனம் செய்யும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த ஒருங்கிணைப்புக் குழுவில், பதிவாளர் கருணாமூர்த்தி, உயர்கல்வி செயலாளர் அபூர்வா மற்றும் பேராசிரியர் ரஞ்சனி பார்த்தசாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT