தற்போதைய செய்திகள்

பஞ்சாப் முதல்வருக்கு 2-ம் தவணை கரோனா தடுப்பூசி

12th Apr 2021 02:31 PM

ADVERTISEMENT

இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியை பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் திங்கள்கிழமை செலுத்திக் கொண்டார்.

ஏற்கெனவே கடந்த மார்ச் 5ஆம் தேதி முதல் கட்ட கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், இன்று (ஏப்ரல் 12) இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கரோனா முன்களப் பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து மூன்றாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT