தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்ட உத்தரவில்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் கே.என். செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 32 ஆண்டுகளாக மூத்த பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் எனத் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்ட இவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக செயல்படவுள்ளார்.