தற்போதைய செய்திகள்

ஏப்.11 முதல் பணியிடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: மத்திய அரசு

7th Apr 2021 07:33 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் எப்ரல் 11ஆம் தேதி முதல் பணியிடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 11 முதல் பணியிடங்களிலேயே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ADVERTISEMENT

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையம் அமைத்து ஏப்ரல் 11 முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தடுப்பூசி செலுத்த தகுதியான 100க்கும் அதிகமான பயனாளிகளை கொண்ட அலுவலகம் அருகில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தை அனுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 8.7 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT