தற்போதைய செய்திகள்

அதிகரிக்கும் கரோனா: பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்

7th Apr 2021 03:32 PM

ADVERTISEMENT

கரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் கர்நாடக அரசு புதிதாக கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

கர்நாடக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,

பெங்களூரு நகர எல்லை பகுதிக்குள் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகின்றது. மேலும், 144 அமலுக்குள் இருக்கும் பகுதிகளில் உள்ள நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், நிகழ்ச்சி அரங்குகள் போன்றவை செயல்பட தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Tags : bangalore section 144
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT