தற்போதைய செய்திகள்

அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம்

7th Apr 2021 02:28 PM

ADVERTISEMENT

அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு பயின்ற தமிழக கல்லூரி மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்து தமிழக அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது.  மேலும், அரியர் தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக அறிவித்தனர்.

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது,

ADVERTISEMENT

அரியர் தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு கலந்து ஆலோசிக்க உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

Tags : arrear exams chennai high court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT