தற்போதைய செய்திகள்

ஜம்மு- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

30th Sep 2020 09:27 PM

ADVERTISEMENT

ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 7வது நாளாக இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்படுகிறது. 

இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான மான்கோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6.45 மணியளவில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக கையெறி குண்டுகள் வீசியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து இந்திய தரப்பிலும் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது என  என கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இருப்பினும், இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை. இதேபோன்று ரஜௌரி மாவட்டத்தின் பூஞ்ச் மற்றும் டேக்வார் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 7 வது நாளாக தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
 

Tags : border
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT