தற்போதைய செய்திகள்

ஓமனில் வெளிநாட்டு வழக்குரைஞர்களின் உரிமம் குறைப்பு

29th Sep 2020 05:25 PM

ADVERTISEMENT

ஓமன் நாட்டில் அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு வழக்குரைஞர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜராக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நீதி மற்றும் சட்ட விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  
கடந்த நவம்பர் 2016 இல் ஓமன் அரசு வெளியிட்ட அறிக்கையில், 31 டிசம்பர் 2020 க்கு பிறகு ஒமன்வாழ் வழக்குரைஞர் அல்லாதவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜராக அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவித்திருந்தனர்.

தற்போது அதை நினைவுபடுத்தும் விதமாக மற்றொரு அறிக்கையில், இந்த நிபந்தனைகளை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஓமன் அரசு தெரிவித்துள்ளது.

ஓமனில் கடந்த சில மாதங்களாக பல்வேறு துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களுக்கான உரிமைகளை குறைத்து ஓமன் நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Oman
ADVERTISEMENT
ADVERTISEMENT