தற்போதைய செய்திகள்

நொய்டாவில் 4 லட்சம் போலி 'ராபிட் கருவிகள்' பறிமுதல்

29th Sep 2020 06:57 PM

ADVERTISEMENT

நொய்டாவில் போலி கரோனா பரிசோதனை கருவிகளை தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து 4 லட்சம் ‘ராபிட் கிட்’களை செவ்வாய்க்கிழமை காவல்துறை பறிமுதல் செய்தனர்.

நொய்டா செக்டார் 20 பகுதியில் ராஜேஷ் பிரசாத் என்பவர் போலி கரோனா பரிசோதனை கருவிகளை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

புகாரின் அடிப்படையில், அங்கு ஆய்வு நடத்திய காவல்துறையினர் சுமார் 3.97 லட்சம் போலி ராபிட் பரிசோதனை கருவிகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பதிப்புரிமைச் சட்டம், 1957 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிமையாளர் ராஜேஷை தில்லி அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்தனர்.

ADVERTISEMENT

Tags : Noida
ADVERTISEMENT
ADVERTISEMENT