தற்போதைய செய்திகள்

குவைத்தில் வெளிநாட்டினருக்கு ஓட்டுநர் உரிமம் தடை

DIN

குவைத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் போக்குவரத்து அமைச்சகம் இந்த ஆணையை வெளியிட்டது. இருப்பினும், கரோனா தொற்றின் காரணமாக அமல்படுத்தாமல் இருந்தது.

தற்போது நோயின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் இந்த விதிமுறையை அமல்படுத்தி உள்ளனர். 

இந்தப் புதிய விதிமுறையால் முன்பே ஓட்டுநர் உரிமம் பெற்ற வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் செவிலியருக்கு உரிமம் எந்த பாதிப்பும் இல்லையெனவும், புதிதாக வழங்குவதற்கு மட்டுமே தடை எனவும் போக்குவரத்து அமைச்சக துணை செயலாளர் மேஜர் ஜெனரல் ஜமால் அல் சயாக் கூறினார்.

மேலும், குவைத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல தடைகளில் இந்த தடை உள்ளது. வளைகுடா நாட்டில் 2.29 மில்லியன் பதிவு செய்யப்பட்ட கார்கள் உள்ளன. மேஜர் ஜெனரல் அல் சயாக் கூறுகையில், குவைத் நாட்டினருக்கான ஓட்டுநர் உரிமங்கள் 648,383 ஆக உள்ளது, இது வெளிநாட்டவர்களுக்கு 822,694 ஆக உள்ளது என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT