தற்போதைய செய்திகள்

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

29th Sep 2020 04:15 PM

ADVERTISEMENT

ஹரியாணாவில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டி சூதாடியதால் 3 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

சிர்சா மாவட்டத்தில் நேற்று துபையில் நடைபெற்ற பெங்களூரு-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பந்தயம் கட்டி சூதாட்டியதற்காக 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ. 20 ஆயிரம் பணம், ஒரு எல்.ஈ.டி தொலைக்காட்சி, 2 மடிக்கணினிகள், 12 ஸ்மார்ட் போன்கள் உள்பட அவர்கள் வைத்திருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : IPL 2020
ADVERTISEMENT
ADVERTISEMENT