தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை

28th Sep 2020 03:21 PM

ADVERTISEMENT

சத்தீஸ்கரில் நக்சல் ஒருவர் மாவட்ட ரிசர்வ் காவல்படையால் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார் என ஐ.ஜி. பி.சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தின் பெடபால்-பிடியா வனப்பகுதிக்கு அருகே இன்று காலை மாவட்ட ரிசர்வ் காவல்படை நடத்திய சோதனையில் அடையாளம் தெரியாத நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திலிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையை டி.ஆர்.ஜி, சிறப்புப் படை(எஸ்.டி.எஃப்), கமாண்டோ பட்டாலியன் ஆஃப் ரெசோலூட் ஆக்சன் (கோப்ரா) மற்றும் பிஜாப்பூர் மற்றும் தாந்தேவாடா மாவட்டங்களின் மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) குழுக்கள் இணைந்து நடத்தியது.

ADVERTISEMENT

கடந்த இரண்டு நாட்களில், பெடியா, டுமார், பெடபால் மற்றும் ஈரானார் ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இந்த நடவடிக்கை இப்பகுதியைச் சுற்றி தொடரும் என்று தெரிவித்தார்.

Tags : chattisgarh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT