தற்போதைய செய்திகள்

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

28th Sep 2020 04:24 PM

ADVERTISEMENT

உத்தரபிரதேசத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டி சூதாடியதால் 4 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை திங்கள்கிழமை தெரிவித்தனர்.

உத்தரபிரதேசத்தின் நகாசா என்ற பகுதியில் நசிம் அக்தர், முகமது நாஜிம், அகிப் மற்றும் ஷாகிப் என்ற 4 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹவுஸ் படே சராயில் உள்ல ஒரு வீட்டில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளில் சூதாடிக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்து, பொருள்களை பறிமுதல் செய்தனர். 

அவர்களிடமிருந்து 11 செல்லிடப்பேசிகள், ஒரு தொலைக்காட்சி மற்றும் ரூ. 11 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக நகாசா காவல் கண்காணிப்பாளர் யமுனா பிரசாத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : UP
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT