தற்போதைய செய்திகள்

தண்ணீர் பகிர்வதில் பிரச்னை : தலித் விவசாயி கொலை

23rd Sep 2020 05:13 PM

ADVERTISEMENT

உத்தரபிரதேசத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் பகிர்வதில் ஏற்பட்ட பிரச்னையால் தலித் விவசாயி தலை துண்டிக்கப்பட்டு திங்கள்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.

உத்தரபிரதேசத்தின் ஷெய்க்பூர் கிராமத்தில் நேது லால் ஜாதவ் (56) என்பவர் திங்கள்கிழமை மாலை தனது வயலுக்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளார்.

அப்போது அருகே இருந்த ரூப் கிஷோர் என்ற விவசாயி தண்ணீரை தனது வயலுக்கு திருப்புமாறு ஜாதவிடம் கேட்டுள்ளார். ஜாதவ் மறுத்ததால் கையில் இருந்த மண்வெட்டியால் ஜாதவின் தலையை துண்டித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றார் கிஷோர்.

இதுகுறித்து ஜாதவின் மகன் ஓம்பல் கூறுகையில், எனது தந்தை இரவு உணவிற்கு வீட்டிற்கு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதிகாலை வரை வராததால் வயலுக்கு சென்று பார்த்தேன். 

ADVERTISEMENT

அங்கு என் தந்தை தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த குற்றத்தை கிஷோர் தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை, அவருடன் சிலர் செய்திருக்கக்கூடும் என கூறினார்.

ஓம்பலின் புகாரின் அடிப்படையில் ரூப் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் வர்மா தெரிவித்தார்.

மேலும், கிஷோர் மீது கொலை மற்றும் எஸ்.சி., எ.ஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த கிஷோரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்த ஷெய்க்பூர் கிராமம் அதிகளவில் தலித் சமூகத்தினர் வசிக்கும் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : UP
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT