தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 16 ஆயிரம் நிதியுதவி

23rd Sep 2020 09:34 PM

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 16 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் செளகான் புதன்கிழமை தெரிவித்தார். 

பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ரூ. 4 ஆயிரம் மற்றும் பிரசவத்திற்கு பின் ரூ. 12 ஆயிரம் நிதியுதவி ‘சம்பல் யோஜனா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இதுவரை 22 மாவட்டங்களில் ஏழைப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாநில அரசு இதுவரை ரூ. 80 கோடி வழங்கியுள்ளது.

மேலும், போஜனா திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணத்தை அரசு செலுத்தும் எனவும் கூறினார்.

ADVERTISEMENT

Tags : madhya pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT