தற்போதைய செய்திகள்

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து 30 பேர் பலி

23rd Sep 2020 07:01 PM

ADVERTISEMENT

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மீது மோதி வெடித்ததில் புதன்கிழமை 30 பேர் உயிரிழந்தனர். 

நைஜீரியாவின் கோகி மாநிலத்தின் தலைநகரான லோகோஜா நகரில் புதன்கிழமை காலை பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து வேறொரு வாகனம் மீது மோதியது.

இதில், டேங்கர் லாரி வெடித்ததில் அருகிலிருந்த 30 க்கும் மேற்பட்டோர் பலியாகினர், மேலும் அங்கிருந்த 10 க்கும் மேற்பட்ட வாகனம் விபத்தில் சிக்கியது.

இதையடுத்து அங்கு விரைந்த காவலர்கள் மற்றும் மீட்புப் படையினர் இறந்தவர்களில் உடல்களை மீட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

கடந்த 2019 ஆம் ஆண்டில் அதே இடத்தில் ஏற்பட்ட விபத்தில் 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : nigeria
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT