தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு: வருமான வரித்துறை

23rd Sep 2020 03:59 PM

ADVERTISEMENT

இந்தியாவில் கடந்த 5 மாதத்தில் வருமான வரி செலுத்திய 32.07 லட்சம் பேருக்கு ரூ. 1.11 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1, 2020 முதல் செப்டம்பர் 22 வரையிலான வருமான வரி செலுத்துவோருக்கான திருப்பி வழங்கல் தொகை ரூ. 1,11,372 கோடி தொகையை 32.04 லட்சம் கணக்குகளுக்கு மத்திய நேரடி வரி வாரியம் திருப்பி வழங்கியுள்ளது.

அதில், 30,29,681 தனிநபர் கணக்குகளுக்கு ரூ. 31,856 கோடியும் 1,76,966 நிறுவன கணக்குகளுக்கு ரூ. 79,517 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

Tags : Income Tax
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT